சிரியாவில் அரச படைகளின் கொடூரம் :ஒரேநாளில் 178 ப் பேர் பலி

images (72)உள்நாட்டுப் போர் வலுவடைந்துள்ள சிரியாவில் திங்கள் கிழமை மட்டும் 178 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களைச் சார்ந்த 31 பேரும் இதில் அடங்குவர். மத்திய மாகாணமான ஹமாவில் ஸலமியா நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் இவர்கள் கொல்லப்பட்டனர். வெடிப்பொருட்களுடன் வந்த நபர் தாமாகவே வெடித்துச் சிதறினார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ராணுவமும், ஆசாத் ஆதரவு ஆயுதக் குழுக்களும் இணைந்து பெரும்பாலான இடங்களில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். துருக்கி எல்லையோடு ஒட்டிய குர்த் நகரமான ராஸல் ஐனில் 56 பேர் கொல்லப்பட்டனர் என்று சிரியன் அப்ஸர்வேட்டரி ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது.

டமாஸ்கஸில் சிரியா போர் விமானங்களும், டாங்குகளும் தாக்குதலை வலுப்படுத்தியுள்ளன. அரசு எதிர்ப்பாளர்களுக்கு செல்வாக்கு மிக்க பகுதிகளில் தாக்குதல் நடக்கிறது. ஃபலஸ்தீன் அகதிகள் வசிக்கும் யர்முக்கில் மோதல் நடந்ததாக அரசு ஆதரவு பத்திரிகையான அல் வத்வான் கூறுகிறது. அரசு எதிர்ப்பு படையான ஃப்ரீ சிரியா ஆர்மிக்கு செல்வாக்கு மிகுந்த துமா, குட்டா, தரயா, முஅதமியாத்துல் ஷாம், யால்தா, பைத்துல் ஸஹீம் ஆகிய இடங்களில் ராணுவம் விமான தாக்குதலை நடத்தியதாக அல் வத்வான் கூறுகிறது.

அனைத்து விதமான ஆயுதங்களும் எதிர்ப்பாளர்கள் மீது அரசு பிரயோகிக்கிறது என்று அப்பத்திரிகை கூறுகிறது. அதேவேளையில், சிரியாவில் தங்களின் குடிமக்களை பாதுகாப்பாக நாட்டிற்கு கொண்டு வர இரண்டு விமானங்களை ரஷ்யா அனுப்பியுள்ளது.நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய நாட்டவர்கள் சிரியாவில் உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post