பாணதுறையில் இடம்பெற்ற இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 5 நாள் இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி-படங்கள்



அண்மையில் க.பொ.த சா/தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

அவ்வாறே கொழும்புப் பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழு பாணதுறையில் இடம்பெற்ற பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர். பயிற்சி நெறிக்கு பொறுப்பாக சகோ. அஸார்தீன் நியமிக்கப்பட்டிருந்தார். இவரோடு இன்னும் பலர் முழு நேரமாக இருந்து மாணவர்களுக்குரிய வழிகாட்டல்களை மிகச் சிறப்பாக செய்தனர்.

கொழும்பு மாவட்ட ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஊழியர்கள் இவர்களது சான்றிதழ் வழங்கும் வைபவத்தினை கொழும்பு தாருல் ஈமானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக பயிற்சி நெறியில் கலந்து கொண்ட சகோதரர்களுடன் அவர்களுடைய பெற்றோர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த வைபவத்தினை பயிற்சி நெறியில் கலந்து கொண்ட சகோதரர்கள் இருவர் தமிழ், ஆங்கில மொழிகளில் மிக சிறப்பாக நடத்தினர்.

கிராஅத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வு பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை உட்பொதிந்ததாக அமைந்திருந்தது. குறிப்பாக சில மாணவர்களது விஷேட நிகழ்ச்சிகள், சகோ. பர்ஹானின் 5 நாள் அநுபவப் பகிர்வு, மாணவர்களது விஷேட நிகழ்ச்சியான நாடகம் போன்ற பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. அத்தோடு மௌலவி இப்ராஹிம் (முஅல்லிம்) 'பிள்ளைகளை இஸ்லாமிய அறநெறியோடு வளர்ப்பதன் அவசியத்தை' நடைமுறை உதாரணங்களுடன் சிறப்புரை ஒன்றினையும் ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் எவ்வாறாக தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினூடாக வழிகாட்டப்படுகிறார்கள் என்பதனை மௌலவி மர்ஷத் (அல்தாபி) தெளிவுபடுத்தியதோடு, பெற்றோரில் சிலர் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களையும் முன்வைத்தனர்.











Post a Comment

Previous Post Next Post