ஊடகத்துறை அமைச்சின் கேட்டோர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் இடம்பெற்றன.
இதன்போது ஊடகவியாலாளர் ஒருவர் ஐந்து திருமணங்களை செய்யவேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே என்று வினவுகையில், சில வினாடிகள் சிரித்துக்கொண்டே இருந்துவிட்டு, இந்த கேள்விக்கு ஒலிவாங்கியை முடுக்கிவிடாமல் தான பதிலளிக்கவேண்டும் என்று தெரிவித்துவிட்டு, ஊடகவியாளர் மாநாட்டில் 5 திருமணங்கள் பற்றி கேள்விக்கேட்கின்றார். என உங்களுடைய மனைவிக்கு தெரியப்படுத்தவா? என்று கேள்வியைக்கேட்ட ஊடகவியலாளரிடமே தொனியை குறைத்து கேட்டுவிட்டார்.
