திருகோணமலை மொரவௌ எட்டாபெந்தியோவ பகுதியில் ஆறு வயது சிறுவரை பாலியல்
துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவர் 15-01-2013 திருகோணமலை
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிபதி சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சிறுவன்
தற்போது சத்திரசிகிச்சைக்கு பின்னர், திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர
சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jaffnamuslim
Jaffnamuslim
