8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 24 பேர் மரணம் எகிப்தில் சம்பவம்

எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா நகரில், இன்று காலை 8 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் அல்மாமூரா என்னுமிடத்தில் உள்ள இந்த கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசிந்து வந்தனர். அவர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர். 
12 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இருந்தும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. விதிமுறைகளை மீறி அனுமதி இன்றி இந்த கட்டிடம் 5 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. 
இந்த கட்டிடத்தின் முதலாளிகள் இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post