இவ்வருட தேசிய மீலாத் விழா கிண்ணியாவில் நடைபெறும்

இம்முறை   2013ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபி விழாவை திருகோணமலையில் கொண்டாடுவதற்கு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் தீர்மானித்துள்ளது.  

இவ்விழாவானது  எதிர்வரும் 25ம், 26ம், 27ம் திகதிகளில் கிண்ணியாவில் நடாத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் சம்மந்தமான கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.  

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 8 பிராந்திய உலமாசபையின் தலைவர்கள் , செயலாளர் உட்பட நகர சபை பிரதேச சபை தலைவரகள் பாடசாலை அதிபர்கள் திணைக்கள செயலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு தேசிய மீலாத் நபி விழாவைச் சிறப்பாக கொண்டாடுவது சம்மந்தமாக தமது ஆலோசனைகளை முன்வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post