(SRN) சட்ட பிரவேச மாணவ ஒன்றியம் நேற்று மல்வத்த மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெற்றுள்ளது.
இதன்போது, சட்டக் கல்லூரி நுழைவு பரீட்சையில், இடம்பெற்றதாக கூறப்படும் குளறுபடிகள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்று மாநாயக்கரிடம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மாநாயக்கர் இந்த சந்திப்பின் போது, சட்ட பிரவேச மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2012ஆம் சட்ட நுழைவு பரீட்சை மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும், உண்மையான பெறுபேறுகளை வெளியிட வேண்டும் எனவும், மாநாயக்கரை சந்தித்ததன் பின்னர் மாணவ ஒன்றிய தலைவர் ரம்சி பாஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
