ஒருபால் திருமணச் சட்டத்திற்கு எதிர்ப்பு:பாரீஸில் ஆர்பாட்டம்

ப்ரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒருபால் திருமணத்திற்கு ஆதரவாக திருத்தியமைக்கப்படவுள்ள சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கத்தோலிக்க திருச்சபை மற்றும் வலதுசாரி அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்ற இப்போராட்டத்திற்கு பெருமளவில் மக்கள் திரண்டு பேருந்துகளிலும், சிறப்புத் தொடர்வண்டிகளிலும் வந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஒருபாலினச் சேர்க்கைத் திருமணத்தையும், ஒருபாலினத் தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதையும் ஆதரிக்கும் வகையில் வருகிற ஜூன் மாதம் ப்ரான்ஸ் நாட்டில் சட்டம் இயற்றப்படவுள்ளது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே பொதுமக்களின் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post