(NF) கண்டியிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த பஸ் ஒன்றிற்குள் பாம்பொன்று தென்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பயணிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றை அடுத்து குறித்த பஸ் நேற்றிரவு கலகெதர பகுதியில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது ஒன்பது நாகங்கள், இரண்டு மலைப்பாம்புகள் மற்றும் இரண்டு குரங்குகளை கைப்பற்றியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நான்கு நாடோடிகள் இவற்றை பஸ்ஸில் எடுத்து வந்திருந்ததாகவும் அவர்கள் மது அருந்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த நாடோடிகள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று கலகெதர நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
