இந்திய இராணுவத்தினர் மீது பாகிஸ்தான் இராணுவம் தாகுதல் நடத்தியதை
கண்டித்து இளைஞர் காங்கிரசார் இன்று சென்னையில் போராட்டம் நடத்தினார்கள்.
மாநில பொதுச் செயலாளர் அனுதாரா அபி இதற்கு, தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது பாகிஸ்தானை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் வீதியில் போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை. கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. பாகிஸ்தான் தேசிய கொடியை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதனை பொலிசார் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் பிரசாத்தை பொலிசார் பிடித்து சென்றனர். உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரை விடுவிக்க கோரினர். இதனால் பொலிசாருக்கும், போராட்டக்காரர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென நடுவீதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பொலிசார் அவரை விடுவித்து போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

Tags
உலகச் செய்திகள்