மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலை தகர்க்க பிக்குகள் மும்முரம்

அநுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலையும், அதனையண்டி வாழும் முஸ்லிம்களயும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தி இன்று சனிக்கிழமை பௌத்த தேரர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

அநுராதபுரத்தில் தர்கா இடிக்கப்பட்டமை, ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று தக்கியா பள்ளிவாசல் தீயிட்டு கொளுத்தப்பட்டமை ஆகியவற்றின் தொடர் சம்பவமாகவே தற்போது நடைபெற்றுள்ள பௌத்த தேரர்களின் போராட்டம் நோக்கப்படுகிறது.

மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் தீயிடப்பட்ட சம்பவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் குறித்த பள்ளிவாசலை சீரமைப்பதற்காக 5 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வடமத்த்திய மாகாண முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அப்பிரதேச பள்ளிவாசலையும், அதனை சூழ்வாழும் முஸ்லிம்களையும் அங்கிருந்து அகற்றக்கோரி பௌத்த தேரர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டமானது பிரதேச முஸ்லிம்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post