கை, கால்களை அடக்கி மறைந்து இருக்க மாட்டேன் - மேர்வின் வீரப்பேச்சு.


(AD) கொந்தளிக்கும் கடல் இருந்தாலும், தீவிரவாதம் இருந்தாலும், எதிரிகள் இருந்தாலும், ஊடகங்கள் எப்படியான அபகீர்த்தியை ஏற்படுத்தினாலும் கை, கால் அடக்கிக் கொண்டு மறைந்திருக்க மாட்டேன் என களனி அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

களனி பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
கை, கால்களை நீட்டி முதுகை நேராக வைத்துக் கொண்டு கம்பஹா மாவட்டத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்வேன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தான் தற்போது பேசுவதில்லை எனவும் உண்பதற்கு மாத்திரமே பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

களனிக்கு தான் அப்போது வந்தபோதுள்ள நிலைமையும் இன்றுள்ள நிலைமையும் மக்களுக்கு நன்கு தெரியும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்களின் சக்தி தனது சக்தி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post