சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானாவின்
விவகாரத்தை குறுகிய அரசியல் நலனுக்கு பயன்படுத்த வேண்டாமென வேண்டுகோள்
விடுத்துள்ள அவர் , எத்தனையோ இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்ட போதும் ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது
என்றும் கூறினார்.
எதிர்க்கட்சி அங்கத்தவர் ஒருவரின் கருத்தை விமர்சித்த பெரேரா, முன்னாள்
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா, மேல்
மாகாண ஆளுநர் அலவி மௌலானா றியாத் ஆளுநர், நீதி அமைச்சர் ஹக்கீம்,
சவூதியிலிருந்த அமெரிக்க, ஓமான் தூதுவர்கள் மற்றும் பல மார்க்க
அறிஞர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுட், ரிசானாவின் உயிரைக்
காப்பாற்றும்படி சவூதி மன்னரிடம் கேட்டிருந்தனர்.
தனது மன்னிப்பின் மூலம் ரிசானாவின் உயிரை காப்பாற்றியிருக்கக்கூடிய
ஒரேயொரு ஆளான இறந்த குழந்தையின் தாய், ரிசானா இறக்க வேண்டுமென்பதில்
பிடிவாதமாக இருந்தார். இதனால் இவர் சவூதி மன்னர் கேட்டும்கூட மன்னிப்பை
வழங்கவில்லை.
சில அரசியல்வாதிகள் சவூதி தூதரகத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டங்களும்
அப்பெண் இரக்கமில்லாத நிலைப்பாட்டை எடுக்க காரணமாகியிருக்கலாம் என அவர்
கூறினார்.
நன்றி - விடிவெள்ளி