போயா தினத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

போயா தினமான நேற்று சனிக்கிழமை பெரும்பாலான விகாரைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். 
போயா தினத்தையொட்டி விகாரைகளில் நேற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில், பல இடங்களிலுமுள்ள விகாரைகளில் பூஜையில் பங்குபற்றியவர்களுக்கு  இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 
ஹலால் உணவுப் பொருட்களை வாங்க வேண்டாமெனவும், முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாமென்பதுடன் முஸ்லிம்களுக்கு காணிகள், வீடுகளை விற்கக் கூடாதெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் இத்துண்டுப் பிரசுரத்தை எந்த அமைப்பு வெளியிட்டதென குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post