முஸ்லிம் உணவகங்களில் உணவருந்தவேண்டாம் : அநுராதபுரத்தில் சுவரொட்டிகள்!


முஸ்லிம் உணவகங்களில் சிங்கள மக்கள் உணவருந்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அநுராதபுரத்தில சுவரொட்டிப் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. 

‘சிங்களவர்களே விழித்தெழுங்கள்’ என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
முஸ்லிம் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் ஒரு வகையான இராசயன பதார்த்தம் சேர்க்கப்படுகிறது. அது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியது. இரசாயனப் பதார்த்தம் சேர்க்கப்பட்ட உணவு வகைகள் சிங்கள மக்களுக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே முஸ்லிம் உணவகங்களில் உணவு உண்பதை தவிர்த்து சிங்களவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அண்மைக் காலமாக அநுராதபுரத்தில் சிங்கள முஸ்லிம் மக்களிடத்தில் விரிசலை ஏற்படுத்த ஒரு குழு செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இச் செயற்பாட்டின் ஓர் அங்கமாக அநுராதபுரம் மல்வத்து லேன் பள்ளிவாசல் இருமுறை சேதமாக்கப்பட்டது. மல்வத்து ஓயா  லேன் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கு முஸ்லிம்களும் உடன்பட்டு அரசாங்கமும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதே இரண்டாம் முறையாக அப்பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான இன முரண்பாட்டு நடவடிக்கைகளால் அநுராதபரம் முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
நன்றி - விடிவெள்ளி

Post a Comment

Previous Post Next Post