வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களுக்கு வயது கட்டுப்பாடு கொண்டுவரும் வகையில் புதிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நாட்களும் வரையறுக்கப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவுக்கு ஆகக்குறைந்த வயது 25 ஆகும். அங்கு செல்வோருக்கு 21 நாட்கள் பயிற்சியளிக்கப்படும்.
ஏனைய மத்தியக்கிழக்கை சேர்ந்த ஏழு நாடுகளுக்கு செல்வதற்கான ஆகக்குறைந்த வயது 23 ஆகும். பயிற்சி காலம் 21 நாட்களாகும்.
அத்துடன் சிங்கபூர், கொங்கொங், மலேசியா, சைபிரஸ் மற்றும் ஏனைய நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வதற்கான ஆகக்குறைந்த வயதெல்லை 21 ஆகும் என்பதுடன் பயிற்சிகாலம் 30 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பணிப்பெண்களை அனுப்புவதை குறைப்பதற்கான நீண்டகால நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டிலான் பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அனுமதி கிடைத்துள்ளது.
.jpg)