கமல்ஹாசனை கைது செய்ய கோரிக்கை!


விஸ்வரூபம் படத்தின் மூலம் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்கிற கருத்தை விதைக்க நினைக்கிற கமல்ஹாசனை கைது செய்யும் படி முஸ்லிம் தலைவர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் இயக்கமான மஜ்லிசே பச்சாவ் தெஹ்ரீக் எனும் அமைப்பின் தலைவரான அம்ஜத்துல்லா கான் என்பவரே இவ்வாறு  கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூகப் பிளவை அதிகப்படுத்தும் இந்தப் படத்தைத் தயாரித்து, நடித்துள்ள கமல் ஹாசன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று  அம்ஜத்துல்லா கான் கோரியுள்ளார்.
மேலும், படத்தில் உள்ள ஆட்சேபகரமான  காட்சிகள் பற்றி ஆராயும் நோக்கில் கர்நாடக பகுதி விநியோகஸ்தர் ஹெச்.டி. கங்கராஜூ காவல் அதிகாரிகளுக்கு இப்படத்தைத் திரையிட்டுக் காண்பித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Post a Comment

Previous Post Next Post