ஹலால் சான்றிதழுக்கு எதிரான பொய் பிரசாரங்களை முறியடிக்க சட்டநடவடிக்கை!


ஹலால் சான்றிதழுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேட்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஹாலால் பிரிவு நாட்டின் முன்னணி சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இதன் தொடரில் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுபல சேனா மற்றும் ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பௌத்த தீவிரப்போக்குடையா அமைப்புக்கள் ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையிலேயே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதேவேளை ஹலால் சான்றிதழ் தொடர்பில் பௌத்த அமைப்புக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமது அலுவலகத்துக்கு வருகைதந்து  விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறியுமாறு  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின்  ஹலால் பிரிவு தேசிய புலனாய்வு பிரிவினரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் வேண்டுகொள்விடுக்கவுள்ளது. இது தொடர்பில் எழுத்துமூலமான அழைப்பு ஒன்றினை அனுப்பி வைக்கவும் உலமா சபை தீர்மானித்துள்ளது.

கடந்த திங்கட் கிழமை கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடாத்திய பொதுபல சேனா அமைப்பு ஹலால் சான்றித்தல் மூலம் அறவிடப்படும் பணம் முஸ்லிம் அமைப்புக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செலவிடப்படுவதாக குற்றம்சாற்றியிருந்த்மை குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி : விடிவெள்ளி 

Post a Comment

Previous Post Next Post