(VK) தேசிய கீதத்தில் தமிழ் மொழியையும் சேர்த்து இசைக்கப்படுவது அரசியலமைப்பை மீறும் செயலாகுமென ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.
தேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் சேர்த்து இசைக்க வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மொழி வசனங்களுடனான தேசிய கீதம் திருகோணமலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின வைபவத்தில் இசைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
தேசிய கீதத்துடன் தமிழ் மொழி சொற்களையும் சேர்த்து இசைப்பது அரசியலமைப்பை மீறும் செயல். அப்படி மாற்ற வேண்டுமென எவராவது ஆலோசனை தெரிவித்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டுமெனவும் ஜா.ஹெ. உறுமய தெரிவித்துள்ளது.
