(JM)முஸ்லிம்கள் குறித்து முஸ்லிம்களே தன்னிடம் வந்து குறைபட்டுக் கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும்
இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இச்சந்திப்பின் தெரிவித்த மேலும் சில தகவல்கள் வருமாறு,
சில முஸ்லிம் பிரதேசங்களில் உருவான குழப்பங்களுக்கு பௌத்த சிங்கள மக்கள்
காரணமல்ல. இனவாதிகளும் காரணமல்ல. முழுக்கமுழுக்க சில பிரச்சினைகளுக்கு
முஸ்லிம்கள்தான் காரணம். உதாரணமாக பேருவைள மற்றும் குருநாகல், வெலிகம
பகுதிககளில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு முஸ்லிம்களே காரணம். முஸ்லிம்கள்
தமக்கிடையே சண்டைபிடித்துக் கொள்கிறார்கள்.
எனக்கு முஸ்லிம்கள் பற்றிய முறைப்பாட்டை தெரிவிப்பவர்கள் முஸ்லிம்கள்தான்.
முஸ்லிம்கள்தான் முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கிறார்கள். முஸ்லிம்கள் பற்றி
மாற்று சமயத்தினரும் முறைப்பாடுகளை கூறிகிறார்கள்.
குறித்த பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்று காணப்படுகையில் அதற்கு அருகாமையில்
மற்றுமொரு பள்ளிவாசல் அமைக்கப்படுகிறது. இதனை புரிந்துகொள்ள முடியவில்லை.
அவ்வாறு எதற்காக பள்ளிவாசல் அமைக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் மற்ற
சமயத்தவர்கள் என்னிடம் வந்து முறையிடுகிறார்கள்.
மேலும் இச்சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகளை விபரித்தனர். முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நோலிமிட் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த, நோலிமிட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தவறான புரிதலின் அனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரொவுர் எமது இணையத்திடம் தெரிவித்தார்.

MR - not a ROBO but donky...............
ReplyDeleteMR is right. We Muslims have no unity between us. That's the main reason for what we are going through now.
ReplyDelete