முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொதுபலசேனா அமைப்புக்கு நோர்வேயிலிருந்து நிதி கிடைக்கிறது. இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கமுடியும் என முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
நன்றி : விடிவெள்ளி இணையம்
அசாத் சாலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு வழங்கப்படுகின்றது என பொதுபலசேனா குற்றம் சாட்டுகிறது. விசாரணை செய்து இதனை நிரூபியுங்கள் பார்க்கலாம்.
முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு நிதி வழங்கவில்லை. பொதுபலசேனா தான் நோர்வேயிலிருந்து நிதியினை பெற்றுக்கொள்கின்றது என்றார்.
