எங்களுக்கும் ஐந்து திருமணங்கள் வேண்டும் : பொதுபலசேனா


பெளத்தர்களுக்கும் ஐந்து திருமணங்கள் செய்துகொள்ளும் வகையில்  சட்டத்தில் மாற்றம்கொண்டுவரப்படவேண்டும் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில்  ஒரே நாட்டில் இரண்டு திருமணம் தொடர்பான சட்டங்கள் இருக்கமுடியாது என அந்த அமைப்பின் செயலாளரான கலகோடஅத்தே ஞானசார தேரர்  தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு மட்டும்  மூன்று,நான்கு திருமணங்கள் செய்துகொள்ள முடியுமாயின் இந்நாட்டின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து பெளத்தர்களுக்கும் அந்த எண்ணிக்கையில் திருமணங்களை செய்துகொள்ளஅனுமதிக்கவேண்டும்   என தெரிவித்துள்ள அவர் அதற்காக தமது அமைப்பு தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
 
ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறை படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

1 Comments

  1. அப்படி போடு அரிவாளை, இனிமேல் தவளை தன் வாயாலேயே கெட்டு விடும். இப்ப உங்க வீட்டு பொண்ணுங்களே உங்களை உதைப்பாங்கடா கண்ணா ........

    ReplyDelete
Previous Post Next Post