'விஸ்வரூபம்' திரைப்படத்தை இலங்கையில் திரையிட தற்காலிக தடை:கெஹெலிய ரம்புக்வெல்ல


உலக நாயகன் கமல்ஹாஸன் இயக்கி நடித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்தை இலங்கையில் திரையிட அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. 

நாளை வெள்ளிக்கிழமை சர்வதேச ரீதியில் இந்த திரைப்படம் வெளியிடவிருந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. 

இதேவேளை, 'விஸ்வரூபம்' திரைப்படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தணிக்கை சபை அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மேற்படி திரைப்படத்தை வெளியிடுவதால் என்ன பிரச்சினை என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post