ஷரீஆ சட்டத்தை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர்:ஓமல்பே

மதரீதியான மூல தர்ம சிந்தனைகளையும் சவூதியின் ஷரீஆ சட்டத்தையும் இலங்கைக்குள் கொண்டுவர அடிப்படைவாத குழுவொன்று முயற்சிப்பதாக ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
 
இதன்பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதி செய்யும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு தோல்வியடையச் செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சவூதி போன்ற கடும் சட்டதிட்டங்கள் உள்ள நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை அரசு உடனடியாக தடை செய்யவேண்டும் .
 
அயல்நாடுகளான இந்திய,பங்களாதேஷ் மற்றும் மியன்மார் போன்ற நாடுகள் தனது நாட்டுப்பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதில்லை. அவ்வாறான நிலையில் இலங்கையானது அந்நியச்செலாவனியை காரணம் காட்டி நாட்டின் கெளரவத்தையும் குடும்ப கட்டமைப்பையும் கலாசாரத்தையும் அடகு வைக்கிறது.
 
சவூதியானது உலகின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவிமடுக்காது மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்களையும் கோரிக்கைகளையும் மீறியே தீர்ப்பை செயல்படுத்தியது. இப்படியான ஒரு நாட்டுக்கு இலங்கையிலிருந்து பணிப்பெண்கள் அனுப்பப்படுவது முற்றாக நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
விடிவெள்ளி

Post a Comment

Previous Post Next Post