ரத்திணபுரி கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
வேனில் வந்த சிலரால் இவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளவர் கஹவத்தை - நீலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த காமினி விக்ரமசிங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதான இவர், கூலி தொழில் செய்பவர்.
வீட்டில் இருந்து தமது கணவர் வேனில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இவர் கஹவத்தையில் இடம்பெற்ற தாய், மகள் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்
என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை
செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
