யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றஸீட் காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு விஜயம்.

(எம்.அப்துல் வதூத்)

காத்தான்குடி இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பினால் நடாத்தப்படுகின்ற ஸாஹிறா விஷேட பாடசாலைக்கு சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் செயலாளரும், சட்ட ஆலோசகருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றஸீட் அவர்களும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் மௌலவி மசூத் மௌலானா, அல்-மனார் அரபுக் கல்லூரி பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி) மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் அவர்களும் பாடசாலைக்கு விஜயம் செய்து தேவைகளை கேட்டறிந்தனர்.


பாடசாலைக்கு விஜயம் செய்த பிரமுகர்களை அமைப்பின்  தலைவர் அல்ஹாஜ் எம்.எஜ்.ஏ பஸீர் ஜே.பி, செயலாளர் அஷ்ஷேய்க் MIM.பஸீர் BA மதனி, பாடசாலை முகாமையாளர் அல்ஹாஜ் MHAM.இஸ்மாயில் B.A மற்றும் உறுப்பினர்களால் மலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.






Post a Comment

Previous Post Next Post