பெண்கள் பாதுகாப்புக்கு கத்தி வழங்கிய கட்சி!

பெண்கள் பாதுகாப்புக்கு கத்தி வழங்கிய கட்சி!
 சிவசேனாவின் மறைந்த தலைவர் பால்தாக்கரேயின் பிறந்த நாளான நேற்று, பெண்களுக்கு அக்கட்சியின் சார்பில் கத்தி வழங்கப் பட்டது. 

மேலும் இந்நிகழ்ச்சியில் சிவசேனாவின் புதிய தலைவராக பால்தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார். பால் தாக்கரே மறைந்ததையடுத்து, சிவசேனா கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இன்று கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவை தலைவராக நியமிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தினை தெரிவித்தனர்.

இதனை அடுத்து பால் தாக்கரேயின் பிறந்த நாளான நேற்று மும்பையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், புதிய தலைவர் நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் லால்பக்கில் நடந்த பால் தாக்கரே பிறந்தநாள் நிகழ்ச்சியில், பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பெண்களுக்கு கத்திகள் வழங்கப்பட்டன.

Post a Comment

Previous Post Next Post