மன்னார் வளைகுடாவில் நான்காவது எண்ணெய்க் கிணறு அகழ்வு வேலைகளை அடுத்த மாதம் முதலே கெய்ன் லங்கா நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.
இவ்வருட நடுப்பகுதியிலேயே எண்ணெய் அகழ்வு வேலைகளை ஆரம்பிப்பது என கெய்ன் இந்தியா அறிவித்திருந்தது. எனினும் குறிப்பிடப்பட்ட நாட்களுக்கு முன்னரேயே அகழ்வு வேலைகளை ஆரம்பிக்கவுள்ளது.
கெய்ன் இந்திய நிறுவனம் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்து இத்தகவலை அறிவித்துள்ளது.
தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தை குறித்த காலத்துக்கு முன்னர் பெற முடிந்தது. அமைப்புப் பணிகள் நல்ல நிலையில் இருந்ததால் குறித்த காலத்துக்கு முன்னரேயே கிணறுகளைத் தோண்ட இயலுமானதாக கெய்ன் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
791 மில்லியன் அமெரிக்க டொலர்களை கெய்ன் நிறுவனம் இந்த காலாண்டில் வருமானமாகப் பெற்றுள்ளது.இது கடந்த ஆண்டைவிட 38 வீத அதிகரிப்பாகும்.
இக்காலாண்டுக்காக வரி செலுத்தப்பட்ட பின் நிறுவனத்தின் இலாபம் 540 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.இது கடந்த ஆண்டைவிட 49 வீத அதிகரிப்பாகும்.
மன்னாரில் இந்த நிறுவனம் மூன்று கிணறுகளைத் தோண்டியுள்ளது. இதில் இரண்டில் இயற்கை கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கெய்ன் இந்திய நிறுவனம் பிரதம நிறைவேற்று அதிகாரி இளங்கோ கருத்து தெரிவிக்கையில் :-இதுவரை தங்களுடைய நிறுவனம் இந்தியாவிலும் இலங்கையிலும், தென் ஆபிரிக்காவிலும் தோண்டியதன் மூலம் எண்ணெய் இயற்கை காஸ் அகழ்வு நடவடிக்கைகளை வெற்றி கரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.