சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கிற்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ரிஸானாவின் மறைவுக்காக ஒரு நிமிட நேரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற வேண்டு கோலுக்கு இணங்கவே இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவளை இன்று பகல் 1 மணியளவில் பாராளுமன்றம் கூடியபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ரிசானா நபீக் விடுதலை குறித்து அரச தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா, ரிசானாவை விடுதலை செய்ய சவுதி அரசிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதென குறிப்பிட்டார்.
ஆனால் அமைச்சர் இவ்வாறு பதிலளிக்கும் வேளையில் ரிசானா நபீக்கிற்கு சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
