மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதியில் இருந்து 13 ஆம்
திகதி வரையில் இந்த டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
எந்த வருடத்திலும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் டெங்கு தொற்று
வீதம் அதிகரித்து காணப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடுன் தற்போது நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் டெங்கு தெற்று
அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் சுகாரதர அமைச்சு
குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே புதிய ஆண்டில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
