
இந்த வீட்டின் உரிமையானர் பல வருடங்களுக்கு முன் அங்கிருந்து வெளியேறிச்
சென்று, சமீபத்தில்தான் தனது வீட்டுக்கு திரும்பியிருந்தார். உடனே
பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட
இடத்திற்கு வந்த பொலிஸார் ரி-56 ரக துப்பாக்கி, 3 தோட்டா மகசின்கள், 50
ரவைகள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
சில வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப்
பகுதியில் இருந்து அவர்கள் பின்வாங்கிச் சென்றபோது, இந்த ஆயுதங்களை
புதைத்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தார்கள்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், அரசு ஆயுதக் களஞ்சியத்தில்
சேர்த்துக்கொள்ளப்பட்டது. முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள்
வாங்குவதற்கு, வெளிநாட்டு தமிழர்கள் நிதியுதவி வழங்கியிருந்தனர்.