தேசத்துக்கு மகுடம் கண்காட்சி ஒத்திவைப்பு!

deyata kirula 2013 200 145
 மார்ச் 23ஆம் திகதி ஆரம்பம்!

பெப்ரவரி 4ஆம் திகதி அம்பாறையில் ஆரம்பமாகவிருந்த தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சி சீரற்ற காலநிலையால் ஒன்றரை மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேசத்துக்கு மகுடம் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்  இதனை அறிவித்தார்.

பெப்ரவரி 4ஆம் திகதி 10ம் திகதி வரை அம்பாறையில் தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சி நடைபெற ஏற்பாடாகியிருந்தது.


எனினும், இக்கண்காட்சி மார்ச் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதுடன், 29ஆம் திகதி வரை இது நடத்தப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.


சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் உள்ளடக்கியதாக முழுமையான வீதி அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை பூர்த்திசெய்யுமாறு ஜனாதிபதி பணித்திருப்பதாகவும், இதற்கு ஏதுவாக தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை ஒத்திவைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post