பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் ஐவர் கைது

45 வயதான பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்துள்ளனர்.

நுகேகொட விஜேராம பகுதியிலேயே நேற்று புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் 119 என்ற அவசரசேவை தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து  மிரிஹான பொலிஸார் சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.(TM)

Post a Comment

Previous Post Next Post