அநுராதபுரம் - மல்வத்துஓயா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை தாக்குதல்.


அநுராதபுரம் மல்வத்துஓயா லேன் பள்ளிவாசல் மீது இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. 

அநுராதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையால் அங்கு வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.  வெள்ளத்தால் பாதிப்பை ஏதிர்கொண்டுள்ள இந்த பள்ளிவாசலின் பின்பகுதியை சிலர் அடித்து உடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிவாசல் பகுதியில் ஒருவகை சத்தம் கேட்டு பிரதேசவாசிகள் அவ்விடத்திற்கு விரைந்த போது விஷமிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே  கடந்த வருடம் செப்டெம்பர் மாதமும் இப் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இதே பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இப்பள்ளிவாசலை அகற்றுமாறும் அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை வெளியேறுமாறும் கோரிக்கைவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post