போரின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு
உதவியது, 6 ஹிந்துக்களை சுட்டுக்கொலைச் செய்தது, இளம்பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அபுல் கலாம் ஆசாத் மீது ஷேக்
ஹஸீனா அரசு சாட்டியுள்ளது.
தீர்ப்பாயம் தண்டிக்கும் முதல் நபர் ஆஸாத்
ஆவார். இப்பொழுது பாகிஸ்தானில் இருப்பதாக கருதப்படும் ஆஸாத் இல்லாமலேயே
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அங்கீகாரம் இல்லாமல் தீர்ப்பாயம்
அரசியல் எதிரிகளை ஒதுக்க ஷேக் ஹஸீனா அரசு உருவாக்கியதுதான் சர்வதேச
தீர்ப்பாயம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நீதிமன்றம் நியமித்த
எதிர்கட்சி வழக்குரைஞருடன் ஆஸாதின் குடும்பம் ஒத்துழைக்கவில்லை.
1971-ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியின்
மாணவர் பிரிவு தலைவராக இருந்தவர் அபுல்கலாம் ஆசாத். போரில் பாகிஸ்தான்
ராணுவத்திற்கு உதவிய குழுவில் இவரும் இருந்தார் என்று அரசு குற்றம்
சாட்டுகிறது. அகண்ட பாகிஸ்தானுக்காக பாடுபட்ட அரசியல் எதிரிகளை குறிப்பாக
ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களை விசாரணைச் செய்வதற்காக
தீர்ப்பாயத்தை(ட்ரிப்யூனல்) அவாமி லீக் அரசு உருவாக்கியது.
ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த
தலைவர்களுக்கும், எதிர்கட்சியான பங்களாதேஷ் நேசனலிஸ்ட் கட்சி(பி.என்.பி)
தலைவர்களுக்கும் எதிராக நீதிமன்றம் குற்றம் சுமத்தியிருக்கிறது.ஆனால்,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இக்குற்றங்களை மறுக்கின்றனர்.
Tags
உலகச் செய்திகள்