ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி:
தாய் நாட்டிற்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஆற்றிய அளப்பரிய பணிகளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என தெரிவித்தார். ஜெனீவா சென்று தேசத்திற்காக குரல் கொடுத்த ஒரேயொரு அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையே என புகழாரம் சூட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த, தனது வாழ்நாளில் ஒருபோதும் ஜம்மியத்துல் உலமா சபையின் சேவைகளை மறக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாட்டை முன்னெடுப்பவர்கள் ஜெனீவா பிரேணையின் போது எங்கிருந்தார்கள் எனவும் இதன்போது கேள்வியெழுப்பியுள்ள ஜனாதிபதி மஹிந்த இலங்கை முஸ்லிம்கள் தமது அரசாங்கத்திற்கு வழங்கும் ஒத்துழைப்புக்காக நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
