நேற்று முன்தினம் மஹரகம நோலிமிட் கிளை முன்பாக சிஹல ராவய அமைப்பின்
ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றமை தொடர்பில் அந்நிறுவனத்தின்
முகாமைத்துவத்தைச் சந்தித்து கலந்துரையாடும் நோக்கிலேயே அமைச்சர் அங்கு
விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது நிறுவனத்தின் பொது
முகாமையாளரிடம் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் கேடட்றிந்து கொண்டார்.
அமைச்சருடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் மற்றும்
அ.இ.மு.காங்கிரசின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோரும் விஜயம்
செய்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - விடிவெள்ளி