நாளைமுதல் பேரூந்துகளில் யாசகம் செய்வது மற்றும் பணம் பெறுவது முற்றாக செய்யப்படும் என்று தனியார் பேரூந்து உரியைமாளர்கள் சங்கம்
குறிப்பிட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
பயணிகளின் முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாளை முதல் இவை நடைமுறைக்கு வருகின்றது.
இதுதொடர்பில் எழுத்து மூலம், பாதுகாப்பு செயலாளர், தனியார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளோம்.
இதற்கு கடந்த காலங்களில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அவர்கள் எங்களுக்கு உதவி புரிவார்கள் என்று எண்ணுகின்றோம் என்றும் கொமுனு விஜேரட்ண எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
