மாவனல்லை ஹிந்குலோயாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹுதா பெரிய பள்ளிவாசல் நிர்வாக தெரிவு தேர்தல் கடந்த 2012 டிசம்பர் மாதம் இடம் பெற்றது.
நடைபெற்ற இத் தேர்தலில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக ஊர் மக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பள்ளிவாசலுடன் சம்பந்தம் இல்லாதவர்கள், வாக்குக் கேட்டவர்களால் வாக்களிக்க அழைத்து வரப்பட்டதாகவும், மூன்று உறுப்பினர்கள் நிர்வாக சபைக்கு தங்களை தாங்களே நியமித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தே இப்பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 28. 12. 2012 , 04.01.2013 ஆகிய வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆவின் பின்னர் பள்ளிவாசலில் ஊர் மக்களுக்கும் தெரிவு செய்ய பட்ட புதிய நிர்வாக சபைக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு கைகலப்புகளும் இடம்பெற்றுள்ளன.
நிர்வாக சபைத் தெரிவு பள்ளிவாசல் சட்டக் கோவைக்கு முரணான முறையில் தெரிவு செய்யப் பட்டதாக ஊர் மக்களில் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, வக்பு சபையின் பிரதிநிதி ஒருவர் சென்ற வெள்ளிக்கிழமை விசாரணைக்காக வருகை தந்திருந்தார். ஜும்மாவைத் தொடர்ந்து விசாரணை பகிரங்கமாக இடம் பெற்றது. புதிய நிர்வாகம் பொது மக்களை கருத்து சொல்ல அனுமதிக்கவில்லை.
நிலைமைகளை நேரில் கண்டறிந்த பின்னர், புதிய நிர்வாக சபை தெரிவை வக்பு சபை பிரதிநிதி தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்தார். இதனைத் தொடர்ந்து வக்பு சபை பிரதிநிதியை புதிய நிர்வாக அங்கத்தவர்கள் வசைமாரி பொழிந்தனர்.
முஸ்லிம்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் மாவனல்லையில் இவ்வாறு நடக்கும் நிகழ்வுகள் குறித்து கல்விமான்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
முந்திய செய்தி : Click
