சீனாவில் பெண்களுக்குத் தட்டுப்பாடு - நிலைமையைச் சீரமைக்க சீன அரசு முயற்சி


மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் பெண்கள் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பதன் பேரில் கடந்த 1980ம் ஆண்டு முதல் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை திட்டம் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டுவர நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து போனது தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைகள் தட்டுப்பாட்டுக்கு ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை' திட்டமே காரணம் என கூறப்படுகிறது. சென்ற 2012 ஆம் ஆண்டு சீனாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், 117 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெறவேண்டும் என்ற கட்டாய சட்டம் இருப்பதால் ஆண் குழந்தை பெறவே விரும்புகின்றனர். தம்பதியர்  கருவில் பெண் குழந்தை இருந்தால் அதனைக் கருகலைப்பு செய்துவிடுவது சீனாவில் வாடிக்கையாகிவிட்டுள்ளது. பெண்களின் விகிதம் குறைந்து வருவதால் நிலைமையைச் சீரமைக்க சீன அரசு முயன்று வருகிறது.

Post a Comment

Previous Post Next Post