ரெயிலில் நிர்வாணமாக நடனமாடியதால் பரபரப்பு.

ரெயிலில் ஆடை களைந்து நடனமாடியதால் பரபரப்பு!
சென்னை: ரெயிலில் ஆடைகளை களைந்து நிர்வாணமாக வாலிபர் ஒருவர் நடனமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் சென்ற ரெயிலில் வாலிபர் ஒருவர் தன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடனம் ஆடினார். நள்ளிரவு நேரமாதலால் பலர் உறக்கத்தில் இருததனர். அந்த நேரத்தில் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்த பெண் பயணி ஒருவர், இவரின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தினார். உடன் ஆண் பயணிகள் சிலர் அந்த வாலிபரை பிடித்து ஆடைகளை உடுத்தச் சொல்லி அமர வைத்தனர். ரயில் குருவாயூர் சென்றடைந்ததும் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கொல்லம் நகரை அடுத்த கொட்டாரக்கராவை சேர்ந்த பிஜு என்பவர் என தெரியவந்தது. இவர் மனநிலை பாதிப்படைந்தவரக இருக்கலாம் என்று கூறப் படுகிறது. மேலும் பல கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப் படுகிறது.

Post a Comment

Previous Post Next Post