(TM)உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை விமர்சித்து நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளோம். நீதிமன்றத்தை அவமதித்த அவரை வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கவும் நாம் அவருக்கு சோறு பார்சல் வழங்குவோம். என்று புதிய சிஹல உறுமய கட்சித்தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' எனும் தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
பிரதம நீதியரசரின் கணக்கு வழக்குகளை பார்த்தே அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார். அப்படியாயின் விமல் வீரவன்சவின் மாளிகை தொடர்பிலும் ஆராய வேண்டும்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக அவரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பவும் அங்கு அரைகாற்சட்டையுடன் இருக்கும் விமலுக்கு நாம் சோற்றுபார்சல் வழங்குவோம்.
விமல் வீரவன்ச திறமையானவர். ஆனால் எங்களுக்கு தேசப்பற்று இதயத்தில் இருக்கின்றது. அவருக்கோ வாயில் இருக்கின்றது என்றார்.
