தவ்ஹீத் ஜமாத் இன் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்


முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறி விஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து இன்று  வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிட இருந்த பேராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

இன்று விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கிலும் இத்திரைப்படம் திரையியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக நேற்று நடந்த ஜமாத்தின் தலைமை நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

எனினும் படம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதையடுத்து மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிட இருந்த பேராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post