கொழும்பு பழைய மீன் சந்தையை 'கோல்ட் மார்க்கட்' ஆக மாற்ற நடவடிக்கை

Gold
 கொழும்பில் முன்னர் மீன் சந்தை இயங்கி வந்த கட்டடத் தொகுதியை அபிவிருத்தி செய்து நகை மாளிகைகளைக் கொண்ட சந்தையாக மாற்றியமைக்க நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.


நகைக் கடைகள் மற்றும் நகை கண்காட்சி நிலையத்தைக் கொண்ட 'கோல்ட் மார்க்கட்' என்ற பெயரில் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட முகாமையாளர் சம்பிக்க டி. சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் முன்னர் இயங்கிவந்த புனித ஜோன்ஸ் மீன் சந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பேலியாகொட பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மீன் சந்தைக்கு மாற்றப்பட்டது.


இதனை அடுத்து குறித்த இடத்தில் நூறு நகைக் கடைகளைக் கொண்ட நகைக் கடைத் தொகுதியாக மாற்ற தீர்மானித்து தற்பொழுது அதன் புனரமைப்பு பணிகளில் 70க்கும் மேற்பட்ட படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிஹால் பெர்னாண்டோ தெரிவித்தார்.


பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post