ஹெலிகாப்டர் கிரேனில் மோதி விபத்து - இருவர் பலி! -வீடியோ


லண்டன் பாராளுமன்றம் அருகே கட்டப் பட்டு வரும் கட்டடத்தின் மீது இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டர் பைலட் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

லண்டன் பாராளுமன்றம் அருகே செயின்ட் ஜார்ஜ் வார்ப் டவர் என்ற புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. கட்டடப் பணிகளுக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் ஓன்று மோதி ரோட்டில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் பைலட் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். பாராளுமன்றம் அருகே கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளதால் இவ்விபத்து திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Post a Comment

Previous Post Next Post