பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி வழங்கப்படும். சல்மான் குர்ஷித் தெரிவிப்பு.

ஜம்மு காஷ்மீர்  எல்லைப் பகுதியில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடைப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இரண்டு இந்திய இராணுவ வீரர்களை தொண்டையை அறுத்துக் கொன்று வெறியாட்டம் ஆடியுள்ள பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இது மனிதத் தன்மையற்ற செயல்; காட்டுமிராண்டித்தனம்; தக்க பதிலடி தர இந்தியா விரும்புகிறது. இந்திய அரசில் எல்லோருடைய கருத்தையும் அறிந்த பிறகு இதில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

செவ்வாயன்று ஜம்முகாஷ்மீரில் உள்ள 'கட்டுப்பாட்டுக் கோட்டை' மீறி வந்த பாகிஸ்தான் இராணுவம் இரண்டு இந்திய சிப்பாய்களைப் பிடித்துச் சென்று தொண்டையை அறுத்துக்கொன்று அதில் ஒருவரின் தலையையும் சிதைத்துள்ளது.

இது தொடர்பாக, வட இந்திய தொ.கா ஓடை ஒன்றுக்குப் பேட்டியளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் "மனிதாபிமானம் அற்ற இச்செயல் மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்குகிறது. தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post