இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் வெள்ளிவிழா - (படங்கள்)

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் வெள்ளிவிழா கொள்ளுப்பிட்டி மேமன் மண்டபத்தில் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி முகாமைத்துவ சபை தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் தலைமையில் நேற்று(15) நடைபெற்றது. பிரதம அதிதியாக மாலைதீவு குடியரசின் இஸ்லாமிய விவகார அமைச்சரும் மாலைதீவு விலா கல்லூரியின் சட்டம் மற்றும் ஷரீஆ முன்னாள் பீடாதிபதியுமான அஸ்ஷெய்க் மொஹம்மட் ஷஹீம் சயீட் அலி கலந்து கொண்டார்.
இதன்போது இணையத்தள அங்குரார்ப்பணம், அல் இஸ்லாஹ் வெள்ளி விழா மலர் வெளியீடு, பாராட்டு நிகழ்வு, இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் புதிய இலச்சினை ஆரம்பம் மற்றும் புத்தகங்களின் வெளியீடு என்பன இடம்பெற்றன. இதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் மற்றும் பேருவளை ஜாமியா நளீமிய்யா பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத், மலேசியாவிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கலாநிதி எம்.ஐ.எம்.இஸ்மத் ரம்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

Previous Post Next Post