திஹாரியிற்கு ஊர்காவல் படை நியமனம். - படங்கள்


கடந்த சில வாரங்களாக திஹாரியின் பல இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை கருத்திற்கொண்டு ஊர்மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திஹாரிய  கிராமத்தின் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக 30 ஊர்காவல் படை உறுப்பினர்கள் நிட்டம்வு பொலிசாரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிகழ்வு இன்று காலை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் லாபிர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பொழுது ஊர்காவல் படையில் நியமனம் பெற்ற உறுப்பினர்களுக்கு நிட்டம்புவ பொலிசாரினால் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் நிட்டம்புவ போலிஸ் மாஅதிபர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

ஊர்காவல் படை அடையாள அட்டை










திஹாரிய ஊர்காவல் படை தொடர்பான முழுமையான விபரங்களை எமது இணையத்தில் எதிர்பாருங்கள்.

Post a Comment

Previous Post Next Post