பாகிஸ்தானில் பதற்றம் : அதிபர் சர்தாரி எங்கே?

பாகிஸ்தானில் பதற்றம் : அதிபர் சர்தாரி எங்கே?
பாகிஸ்தானில் புரட்சி ஏற்படும் சூழல் உள்ளதால் அதிபர் சர்தாரி நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஊழல் அதிகரித்து வருவதால் அரசாங்கம் பதவி விலகியாக வேண்டும், நாடாளுமன்றத்தை உடனே கலைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்ரியும், அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய பாகிஸ்தான் உச்ச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அதிபர் சர்தாரி குடும்பத்துடன் துபாய்க்கு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்றும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post