அமெரிக்காவின் நியூயார்க்
நகரில் பள்ளிக்குச் சென்ற சிறுவனின் புத்தகப் பையில் சக்தி வாய்ந்த
துப்பாக்கி பறிமுதல் செய்யப் பட்டது.
நியூயார்க்
நகரில் உள்ள பிரபல்யமான வேவ் எலிமெண்டரிப் பள்ளியில் படிக்கக் கூடிய 7
வயது சிறுவனின் புத்தகப் பையில் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்
பட்டது. இதனால் அப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியும்
அச்சமும் அடைந்தனர். பிறகு ஆசிரியர்கள் அந்தச் சிறுவனிடமிருந்து
துப்பாக்கியை கைப்பற்றி, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும்
அப்பள்ளி ஒரு மணிநேரம் மூடப்பட்டது.
துப்பாக்கி வைத்திருந்த சிறுவன்
குறித்தும், அந்தத் துப்பாக்கியில் குண்டுகள் இருந்தனவா? என்பது குறித்த
தகவலையும் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.
Tags
உலகச் செய்திகள்
